லட்சங்களில் சம்பாதிக்கும் விஜய் டிவி பாலாவின் மோசமான நிலை! ரோட்டோரம் அமர்ந்து சாப்பிடும் வீடியோ வைரல்
Star Vijay
By Parthiban.A
விஜய் டிவியின் முக்கிய காமெடியன்களில் ஒருவர் பாலா. அவர் KPY உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் அதிகம் காமெடி செய்து ரசிகர்களை ஈர்த்தார் அவர். தற்போது குக் வித் கோமாளியில் முக்கிய கோமாளியாக இருந்து வருகிறார் பாலா.
இப்படி தொலைக்காட்சியில் முக்கிய பிரபலமாக இருக்கும் அவர் ஒரு எபிசோடுக்கு லட்சங்களில் தான் சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.
ஆனால் தற்போது பாலா நடுரோட்டில் அமர்ந்து நள்ளிரவில் பரோட்டா சாப்பிடும் வீடியோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
அவருக்கா இந்த நிலைமை என ஒரு சிலர் வருத்தப்பட, அவரது எளிமையை பார்த்து மேலும் சிலர் பாராட்டி வருகிறார்கள். லட்சங்களில் சம்பாதிக்கும் அவர் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்றும் பலர் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.