இதெல்லாம் ஒரு பிராங்க்-ஆ!! பாக்யலட்சுமி ராதிகாவையே கோபப்பட வைத்த பிக்பாஸ் தனலட்சுமி!!
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி பல கலைஞர்களை உருவாக்கி வரும் நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. தற்போது அந்நிகழ்ச்சியில் சாம்பியன்ஸ் 4 சீசன் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியில் மதுரை முத்து, பாலாஜி, பாக்யலட்சுமி ரேஷ்மா, ரித்திகா போன்றவர்கள் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். அரந்தாங்கி நிஷா மற்றும் பாலா தொகுத்து வழங்கிய இந்த வார எபிசோட்டிற்கு பிக்பாஸ் பிரபலங்களாக தனலட்சுமி, ஜனனி, அமுதவாணன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது நிஷாவை பார்த்து ஏன் அப்படி சொன்னீங்க என்று தனலட்சுமி ஏதோ கேட்க, அதற்கு நிஷாவும் கோபப்பட்டுள்ளார். அவங்க மனைவி இப்படி இருக்காங்கன்னு என் மூஞ்சிய கிண்டல் செய்தீங்க என்று நிஷாவுடன் வாக்குவாதம் செய்து தனலட்சுமி வெளியேறினார்.
அதற்கு வெளியதானே போற இந்த பக்கம் போங்க என்று கூறி கிண்டல் செய்தார். அதன்பின் இது பிராங்க் தான் என்று நிஷாவுக்கு ஷாக் கொடுத்தனர்.
இதனால் கோபப்பட்ட பாக்யலட்சுமி ரேஷ்மா மைக்கை கழட்டிவிட்டு வெளியேறிய பிரமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இது காமெடி நிகழ்ச்சியா? இல்ல, பிராங்க் நிகழ்ச்சியா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.