கொட்டிய தலைமுடி!! விக் வைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன KPY தீனா..
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவார்கள் பலர் தற்போது வெள்ளித்திரையில் நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்கள். அந்தவரிசையில் இருந்து தற்போது முழ் காமெடியன் அவதாரம் எடுத்துள்ளவர் தான் KPY தீனா.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தை ஈர்த்து வந்த தீனா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து மிகப்பெரிய இடத்தை பிடித்தார். பின் தும்பா, கைதி, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு தாவி டூப் குக்காக கலந்து கொண்டு வருகிறார். சமீபகாலமாக தீனாவிற்கு முடிக்கொடி சொட்டையாகும் அளவிற்கு மாறியது. அதை தற்போது விக் வைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார் KPY தீனா.