'அது நான் இல்லை'.. பரவிய வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த நடிகை க்ரீத்தி ஷெட்டி..
தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் க்ரீத்தி ஷெட்டி. இவர் நடிப்பில் வருகிற 12ஆம் தேதி வா வாத்தியாரே படம் தமிழில் வெளியாகிறது.
இதை தொடர்ந்து Lik மற்றும் ஜீனி ஆகிய தமிழ் திரைப்படங்களை க்ரீத்தி கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நான் மஹான் அல்ல படத்தில் ஒரு சிறுமிதான் க்ரித்தி ஷெட்டி என பலரும் கூறி வந்தனர்.

இந்த நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் க்ரித்தி ஷெட்டி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். "நான் மஹான் அல்ல படத்தில் வர சின்ன பொண்ணு நான் தான் என்று வந்த மீம் பொய். அதை ரொம்ப ஆணித்தனமா வேறு போட்டு இருக்காங்க. என் நண்பர்கள் கூட தானான்னு அந்த பொண்ணுன்னு கேட்டாங்க. நான் 11 வயசுல தான் நடிக்கவே ஆரம்பிச்சேன், அதுகூட ஒரு விளம்பரத்துல தான் நடிச்சேன். ஆனா அந்த படத்துல வந்தது நான் இல்லை" என கூறியுள்ளார்.

இதன் மூலம் இவ்வளவு நாளாக பரவி வந்த வதந்திக்கு நடிகை க்ரீத்தி ஷெட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.