அண்ணனுக்கு பிகினில தான் ராக்கி கட்டுவியான்னு அசிங்கப்படுத்திய கங்கனா!! க்ரித்தி சனோன் பதிலடி...
க்ரித்தி சனோன்
பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை க்ரித்தி சனோன், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, நகை பிராண்ட் விளம்பரத்தில் அண்ணன் தங்கை பாசத்தை கொண்டாடும் ரக்ஷா பந்தன் விழாவில் நடிகை க்ரித்தி சனோன், பிளவுஸ், ஸ்கர்ட் அனிந்து நடித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், அந்த விளம்பரத்தில் நாய் ஒன்றுக்கும் ராக்கி கட்டும் காட்சி அமைந்தது. இந்த விளம்பரத்தை பார்த்த நெட்டிசன்கள், இந்த பண்டிகைகளையும் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக அரைகுறை ஆடையில் ரக்ஷா பந்தன் கொண்டாடுவதா என்று விமர்சித்து வந்தனர்.
இது பலருக்கு அதிர்ச்சி கொடுத்து வந்த நிலையில், தன்னுடைய இன்ஸாகிராம் பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.
கங்கனா
அதில், அந்த விளம்பரத்தை சுட்டிக்காட்டி, பெண்களாக பிறந்தது, இரு பொற்காலம். நம்முடைய அலமாரியில் காக்டெய்ல் டிரஸ்கள் முதல் லெகங்கா சோளி வரை, ஜீன்ஸ், புடவை, பிகினி என்று இருக்கும். இவ்வளவு ஆடைகள் இருந்தும், ஒரு பெண் தன்னுடைய அண்ணனுக்கு பிகினி, உள்ளாடையுடன் ரக்ஷா பந்தன் கயிறு கட்டுவாரா? உங்களுடைய ஆடை தேர்வுகள் எங்கே போனது? என்று கேள்வி எழுப்பி, அந்த விளம்பரத்தை வேண்டுமென்றே அருவருப்பாக எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பதிலடி.
அதற்கு நடிகை க்ரித்தி சனோன், ரக்ஷா பந்தன் என்பது பாதுகாப்பிற்கான ஒரு பிணைப்பு, நானும் என் சகோதரியும் ஒருவருக்கொருவர் எந்த வகையிலும் குறைவாக பாதுகாத்துக் கொள்ள முடியாது என்பதை நாங்கள் அறிவோம். ஒருவருக்கு ஒருவர் ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுக்காக நாங்கள் பிரச்சனை செய்கிறோம்.
எங்களை பொறுத்தவரை, இந்த பிரச்சனையும் வாக்குறுதியும் எங்கள் நாய்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. மேலும் பெண்கள் என்ன ஆடையணிய வேண்டும் என்று சொல்வதை நாம் எப்போது நிறுத்தப் போகிறோம், இனக்குழுவின் நாகரீகம் பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்துள்ளது.
ஆனால் இன்னும் ஒரு பெண்ணின் கலாச்சாரத்திற்கான மரியாதை அவளது உடைகளை வைத்தே அளவிடப்படுகிறது. கலாச்சாரமும் பாரம்பரியமும் அவளது இதயத்தில் இருக்கிறதே தவிர, அவளது கழுத்தை சுற்றிலும் அணிந்துள்ள ஆடையில் இல்லை என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார். இதற்கு ராகுல் காந்தி உட்பட பலரும் க்ரித்தி சனோனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
