12 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த பெண் குழந்தை!! பாடகி சித்ரா உருக்கமாக போட்ட புகைப்படம்..
தென்னிந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் பாடகி கே எஸ் சித்ரா. தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 25 ஆயிரம் பாடலுக்கும் மேற்பட்ட பாடல்களில் பாடி சாதனை படத்த பாடகியாக திகழ்ந்து வருகிறார்.
தற்போது ஒருசில படங்களில் பாடியும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். சித்ரா திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
வெளிநாட்டில் பாடல் கச்சேரிக்காக ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது அங்கிருந்த நீச்சல் குளத்தில் குழந்தை நந்தனா தவறி விழுந்து இறந்திருக்கிறார்.
இந்த சம்பவம் இந்திய திரையுலகை சார்ந்தவர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. அன்று முதல் மகள் பிரிவால் வாடி வந்த சித்ரா, அதன்பின் இயல்பு நிலைக்கு வந்தார்.
ஆண்டுதோறும் தன் மகள் இறந்த நாளன்று மகள் பற்றிய பதிவினை போடுவார் பாடகி சித்ரா. தற்போது மகள் மரணமடைந்து 12 ஆண்டுகள் கடந்ததை நினைத்து உருக்கமாக ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார் கே எஸ் சித்ரா.