நடிகர் திலகத்துக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்த பிரபல இயக்குனர்!! இப்படியொரு வார்த்த சொல்லிய சிவாஜி
தமிழ் சினிமாவின் நடிகர் திலகமாக திகழ்ந்து மக்கள் மத்தியில் சிறந்த நடிகராக வாழ்ந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். அவர் படத்தில் நடிக்க பலரும் போட்டிப்போட்டு வந்தனர். சிவாஜி வயதாக வயதாக குணச்சித்திர ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.
அப்படி ரஜினி, கமல், விஜய் படங்களில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் சிவாஜி. அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படம் படையப்பா. அப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்தது பற்றிய சில தகவலை கே எஸ் ரவிக்குமார் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
படத்தில் தம்பிக்கு சொத்தை கொடுக்கும் காட்சி. பத்திரத்தில் குடும்பத்துடன் சிவாஜி கையெழுத்து போடுபோது ரஜினி, லட்சுமி அமைதியாக இருந்து, சித்தாரா வரும் போது தலையை தொடும் போது கேமெரா உங்ககிட்ட வரும் சார்.
அப்போ உங்க கண்ல தண்ணி வரனும்னு கூறினேன். அதற்கு சிவாஜி, பையன், மனைவி கையெழுத்து போடும் போது அழல. சித்தாரா கையெழுத்து போடும் போது ஏன் நான் அழனும் என்று என்னிடம் கேட்டார்.
நீ நடிச்சி காமி என்று சொன்னதும் நடிச்சி காட்டினேன். அதற்கு அவர் இவன் டைரக்டர் மட்டுமில்லை, நடிகன்-னு சொன்னதான சசி சார் கூறியது, இதுவே எனக்கு ஆஸ்கர்-னு நினைத்ததாக கே எஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார்.