2வது விவாகரத்து! நடிகையை யாருன்னே தெரியாது என கூறிய முன்னாள் முதலமைச்சர்! விமர்சனத்தில் சிக்கல்..

Karnataka Ex chief minister Kumarasamy Kuttyradhika
By Edward Oct 24, 2021 11:33 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் இயற்கை படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ஒருசில படங்களில் மட்டும் நடித்து காணாமல் போனவர் நடிகை குட்டி ராதிகா. இதையடுத்து அடையாளம் தெரியாமல் போக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை இரண்டாம் திருமணம்  செய்து ஒரு மகளை பெற்றெடுத்தனர்.

பின் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து கேட்டு பிரிந்தனர். இந்நிலையில் குமாரசாமிக்கு இரு மனைவிகள் என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்தனர்.

இதுபற்றி சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் சிந்தகி தொகுதியில் ஜனதா தள கட்சி பிரமுகரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது தன்னுடைய இரண்டாவது திருமணத்தை பற்றி அவர் பேசியுள்ளார்.

தன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இரண்டாவது திருமணம் செய்தது தான் என்றும், பின்னர் அதை திருத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தன் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் நான் எதையும் மூடி மறைக்க வில்லை என்று கூறியுள்ளார்.

என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பாஜக விமர்சிப்பது சரியல்ல என்றும் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு ரகசியம் உண்டு. நானும் பாஜகவின் ரகசியங்களை வெளிப்படையாக கூறினால் அனைவரும் வீதிக்கு வந்து விடுவார்கள் என்று கூறி எச்சரிக்கை மணி அடித்துள்ளார் குமாரசாமி.