10 முறை தகாத வகையில் என்னைத் தொட்டு!! இயக்குநர் மீது கும்பமேளா மோனலிசா புகார்..

Sexual harassment Uttar Pradesh Indian Actress Actress
By Edward Mar 26, 2026 05:45 AM GMT
Report

கும்பமேளா மோனலிசா

உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக் ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. 40 நாட்கள் நடந்த இந்த கும்பமேளாவில் பாசிமணி விற்ற இளம்பெண் மோனலிசா ஒரே நாளில் பிரபலமாகினார்.

10 முறை தகாத வகையில் என்னைத் தொட்டு!! இயக்குநர் மீது கும்பமேளா மோனலிசா புகார்.. | Kumbh Mela Monalisa Allegations Against Director

அவரது கண்கள், சிரிப்பு, முகத்தோன்ற்றம் பலரையும் கவர, அவரின் வீடியோ நாடு முழுவதும் பரவியது. அதேசமயம் அவரது அழகு ஆபத்தாகவும் மாறியுள்ளது. பலரும் மோனலிசாவை தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். இதனால் சொந்த ஊரான மத்திய பிரதேசத்தின் இந்தூருக்கே திரும்பிச்சென்றார்.

தொடர்ந்து சினிமா வாய்ப்பு அவருக்கு வர, மோனலிசா போஸ்லே, சமீபத்தில் தன்னுடைய காதலர் முகமது ஃபர்மான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

10 முறை தகாத வகையில் என்னைத் தொட்டு!! இயக்குநர் மீது கும்பமேளா மோனலிசா புகார்.. | Kumbh Mela Monalisa Allegations Against Director

இந்நிலையில், கொச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய மோனலிசா, தன்னுடைய முதல் பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி அழுதுள்ளார்.

சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் தி டைரி ஆஃப் மணிப்பூர் என்ற படத்தின் மோனலிசா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு நேபாளம், டேராடூனில் நடந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.

10 முறை தவறான முறையில்

மோனலிசா அழுது கொண்டே, சனோஜ் மிஸ்ரா ஒரு நல்ல மனிதர் அல்ல, ஓரிரு முறை 10 முறை தவறான முறையில் என்னைத் தொட்டார். அப்போது என்னுடைய பெற்றோரும் அருகில் இருந்தனர். அவர் தவறாக தொட்டதை நான் என் குடும்பத்தினரிடம் சொன்னேன், அப்படி சொன்னப்பின்பும் என்னுடைய குடும்பத்தினர் எனக்கு ஆதரளவிக்கவில்லை. நான் பட்ட துன்பங்கள் எனக்கு மட்டுமே தெரியும். எனக்கு அநீதி இழைக்கப்பட்டது, எனக்கு நீதி வேண்டும்.

10 முறை தகாத வகையில் என்னைத் தொட்டு!! இயக்குநர் மீது கும்பமேளா மோனலிசா புகார்.. | Kumbh Mela Monalisa Allegations Against Director

இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்னிடம் பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டார். ஆனால் என் பெற்றோர்கள் இது உன்னுடைய முதல் படம் என்று கடந்து செல்ல பார்த்தனர். முதல் படம் என்பதற்காக அவர்கள் என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவார்களா?. திரைப்படங்களின் பெயரை பயன்படுத்தி நடிகைகளை விரும்பும் இளம்பெண்களிடம் தவறாக பேசி துன்புறுத்தி அவர்களிடம், இயக்குநர் மனோஜ் மிஸ்ரா கீழ்த்தரமான வேலைகளை செய்கிறார்.

முன்பே இதுதொடர்பாக புகாரளிக்க இருந்தேன். என் குடும்பத்தினர் என்னை விடவில்லை. இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்னுடைய திருமணத்தை முன்வைத்து மதரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்த விரும்புகிறார். எனக்கு வெவ்வேறு மதத்திருமணம் என்பதால் அதுதொடர்பாக தவறான தகவல்களை பரப்புகிறார் என்றும் கூறியிருக்கிறார் மோனலிசா.