51 வயதில் இளம் நடிகைக்கே டஃப் கொடுக்கும் குஷ்பு! ஒல்லியாக மாறி இப்படி மாறிட்டாங்களே..
80-களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் தற்போது வரை சினிமாவில் நிலைத்திருக்க காரணம் அவர்களின் நடிப்பும், வயதானாலும் இளமையோடு இருப்பதால் தான்.
அப்படி தற்போது வரையில் சினிமாவில் குணச்சித்திர ரோலில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் குஷ்பூ. தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தமிழில் தர்மத்தின் தலைவன் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார்.
இப்படத்திற்கு பிறகு ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தார். அந்த காலத்திலேயே குஷ்பூவிற்கு கோவிலே கட்டும் ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
தற்போது 51 வயதாகியும் சினிமாவில் நிலைத்து நடித்துக்கொண்டிருக்கிறார். பல வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்தார். மேலும், நந்தினி, மீரா, லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.
குண்டாக இருந்த குஷ்பூ தற்போது ஒல்லியாக மாறி இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு மாறியிருக்கிறது. சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.