ஹீரோயின் ஆகும் குஷ்பூவின் மகள்? தனது தாய் குஷ்பூவின் இடத்தை பிடிப்பாரா

Sundar C Kushboo
By Kathick Apr 08, 2025 02:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. இவர் இயக்குநர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திகா என இரு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் அனந்திகா இயக்குநர் மணி ரத்னத்திடம் பணிபுரிந்து வருகிறார் என தகவல் கூறுகின்றனர்.

ஹீரோயின் ஆகும் குஷ்பூவின் மகள்? தனது தாய் குஷ்பூவின் இடத்தை பிடிப்பாரா | Kushboo Daughter Avantika Heroine Entry In Cinema

இந்த நிலையில், மூத்த மகள் அவந்திகாவும் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் என்றும் அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்றும் கூறுகின்றனர். இவருடைய போட்டோஷூட் கூட ரசிகர்களை கவரும் வண்ணம் இருக்கும்.

ரசிகர்களும் இவர் விரைவில் சினிமாவில் ஹீரோயினாக வருவார் என கூறி வந்தனர். பொறுத்திருந்து பார்ப்போம் அவந்திகா ஹீரோயினாக எண்ட்ரி கொடுப்பாரா? அப்படி கொடுத்தால் தனது தாய் போலவே முன்னணி நடிகையாக வலம் வருவாரா என்று.

Gallery