சுந்தர் சி-க்கு ரொமான்ஸே வராது!! வாழ்க்கை ஃபுல்லா நடிக்கிரோம்!! நடிகை குஷ்பூ..
குஷ்பூ
90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக தென்னிந்திய சினிமாவை கலக்கி வந்தவர் நடிகை குஷ்பூ. தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்த குஷ்பூ டாப் நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.
குஷ்பூவுக்கு என்றே கோவில் கட்டி அவரது ரசிகர்கள் கொண்டாடியும் வருகிறார்கள். இயக்குநர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து இரு மகள்களை பெற்றெடுத்த குஷ்பூ, சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது சுந்தர் சி பற்றிய ஒரு விஷயத்தை கூறி ஷாக் கொடுத்துள்ளார். அதில், குஷ்பூவிடம், உங்களுடன் நடித்த நடிகருக்கு ரொமான்ஸே வராது என்றால் அது யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு குஷ்பூ, சுந்தர் சி போட்டோ எங்கடா, அவருக்கு ரொமான்ஸே வராத ஒரு நடிகர்னா சுந்தர் சி தான். வாழ்க்கை ஃபுல்லா நடிக்கிறேன், ரொமான்ஸ் முதல் எழுத்து R கூட அவருக்கு வராது என்று கூறியிருக்கிறார்.