ரஜினிகாந்த் சரியான சமயத்தில் அதை செஞ்சிருந்தா!! நடிகை குஷ்பூ ஓப்பன் டாக்..
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே ரஜினிகாந்த் அரசியல் வரவேண்டும் என்று 90ஸ் காலத்தில் இருந்தே அவரது ரசிகர்கள் ஆவலோடு கேட்டு வந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி அதிலிருந்து சற்று ஒதுங்கி இருந்து வருகிறார்.
நடிகை குஷ்பூ
இந்நிலையில் பிரபல நடிகை குஷ்பூ, ரஜினிகாந்தின் அரசியல் பற்றி பேசிய பேட்டியொன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பேட்டியில், நான் நடிகர் ரஜினியை சந்தித்து அரசியல் குறித்து பேசியிருக்கிறேன்.
சரியான நேரத்தில் மட்டும் அவர் அரசியலுக்கு வந்திருந்தால், தமிழ்நாட்டுடைய அரசியல் மேப் இப்போது வேறுமாதிரி மாறியிருக்கும் என்று குஷ்பூ தெரிவித்துள்ளார். குஷ்பூவின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் அரசியலுக்கு ரஜினிகாந்த் வந்திருக்கலாமோ, மிஸ் ஆகிட்டுச்சே என்று சோகத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.