சுந்தர் சி பர்த்டே பார்ட்டியில் விஷால் மீனா ஒரு பக்கம்!! குஷ்பூ கொடுத்த பளீச் முத்தம்.. புகைப்படம்
சுந்தர் சி 57
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் சுந்தர் சி. சமீபத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் அவர் இயக்கிய மதகஜராஜா படம் 45 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இது ஒரு பக்கம் இருக்க சுந்தர் சி தன்னுடைய 57வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.
அதற்காக, சினிமா பிரபலங்களுக்கு உயர்தர நட்சத்திர விடுதியில் இரவு மது பார்ட்டி வைத்திருக்கிறார். விஷால், விமல், வடிவேலு, யோகி பாபு, நடிகர் மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஆர்.ஜே பாலாஜி என பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், நடிகைகளில், மீனா, ஐஸ்வர்யா ராஜேஸ், டிடி நீலகண்டன், வாணி போஜன், ஐஸ்வர்யா, சங்கீதா, பிருந்தா மாஸ்டர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
குஷ்பூ கொடுத்த பளீச் முத்தம்
இந்த பார்ட்டி தொடர்பான புகைப்படங்கள் பிரபலங்கள் இணையத்தில் பகிர்ந்து வந்தனர். தற்போது குஷ்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுந்தர் சிக்கு பசக் என்று முத்தம் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து தன்னுடைய அன்பை வெளிகாட்டி இருக்கிறார்.
ஏற்கனவே விஷால் பார்ட்டியில் மீனா மீது கைப்போட்டும் பல நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களும் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.