லைலாவுடன் ரொமாண்டிக் டான்ஸ் ஆடிய நடிகர்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் வெளியிட்ட வீடியோ..

Laila Viral Video Instagram
By Edward Dec 14, 2022 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வட இந்திய நடிகையாக தமிழில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை லைலா. முன்னணி நடிகர்கள் அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நடிகை லைலா 2006ல் மெஹ்தீன் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார்.

கடந்த 16 வருடங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வந்த லைலா தற்போது மீண்டும் கார்த்தியின் சர்தார் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். இதனையடுத்து லைலா வதந்தி என்ற வெப் தொடரில் நடித்தும் இருக்கிறார்.

இப்படத்தில் பிரபல தொலைக்காட்சி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிர் ரோலில் நடித்து வரும் குமரன் தங்கராஜுடன் லைலா ரொமாண்டிக் பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். க்யூட்டாக அவர்கள் செய்த அத வீடியோவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.