இரு குழந்தைகளுக்காக 16 வருடம் சினிமாவை ஒதுக்கிய நடிகை லைலா! 41 வயதில் இந்த நடிகருக்கு ஜோடியா?
தென்னிந்திய சினிமாவில் குறும்புத்தனமான நடிப்பால் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வந்த நடிகை லைலா. 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை லைலா. அஜித்தின் தீனா படம் லைலாவிற்கு மிகப்பெரியளவில் பேர் பெற்று கொடுத்தது.
அதன்பின் சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்தார். 2006 மெஹ்தின் என்பவரை திருமணம் செய்து கொண்ட லைலா சினிமாவில் இருந்து விலகினார். இரு குழந்தைகளுக்கு தாயாகியதும் குடும்பத்தினை மட்டும் பார்த்து வந்தார்.
சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜுனியர் நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்றினார். பின் கோகுலத்தில் சீதை சீரியலில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் 16 வருடங்களுக்கு பின் நடிகை லைலா மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. அதுவும் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடிக்க லைலா கவனம் செலுத்தி மீண்டும் தன் இடத்தினை பிடிப்பாரா என்று பார்ப்போம்.