சென்னை ஹோட்டலில் தங்கிய தெலுங்கு நடிகைக்கு நடந்த சம்பவம்.. கலங்கி வீடியோ வெளியிட்ட நடிகை

Indian Actress
By Parthiban.A Feb 08, 2026 04:30 AM GMT
Report

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. அவரும் பிரபல நடிகை மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளிலும் தற்போது பங்கேற்று வருகிறார். நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பர் மோகன் பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று லட்சுமி மஞ்சு சென்னையில் இருக்கும் க்ரீன் பார்க் ஹோட்டலில் தங்கி இருக்கிறார். அங்கு தனக்கு நடந்த சம்பவத்தை காட்டமாக வீடியோவில் கூறி இருக்கிறார் அவர்.

சென்னை ஹோட்டலில் தங்கிய தெலுங்கு நடிகைக்கு நடந்த சம்பவம்.. கலங்கி வீடியோ வெளியிட்ட நடிகை | Lakshmi Manchu Face Issue At Chennai Hotel

எப்போதும் construction வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். அதனால் அறையில் டக டக என சத்தம் வந்துகொண்டே இருக்கிறது.

ஹோட்டல் அறையில் போட்டோ எடுக்க கூடாது என சொல்லி போட்டோக்ராபரை உள்ளே விட முடியாது என்கிறார்கள். No என ஒரே வார்த்தையில் மேனேஜர் ராகுல் rude ஆக பேசுகிறார்.

சில தினங்கள் முன்பு தான் என் ஸ்டைலிஸ்ட் வந்தபோது இதே ஹோட்டலில் போட்டோஷூட் செய்ய அனுமதித்து இருக்கிறார்கள். ஆனால் எனக்கு முடியாது என்கிறார்கள். போட்டோ எடுக்க கூடாது என்பதற்கு என ரூல்ஸ் இருக்கிறது என காட்டுங்கள் என்றால் அதையும் காட்ட மறுக்கிறார்கள்.

இப்படி கோபமாக அவர் பேசி இருக்கிறார். வீடியோவை பாருங்க.