அந்த காட்சியில் என் பாய் ஃபிரெண்டை நினைத்து தான் அடித்தேன்!! வதந்திக்கு பின் காதலர் பற்றி கூறிய நடிகை லட்சுமி மேனன்
மலையாள நடிகையாக 15 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை லட்சுமி மேன். கும்கி படத்தில் மூலம் தமிழில் அறிமுகமான லட்சுமி மேனன் நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கண்டார்.
அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார். இடையில் படிப்பை தொடர்ந்த லட்சுமி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் வாய்ப்பு சரியாக அமையாததால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது சிப்பாய் படத்திலும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 27 வயதாகும் லட்சுமி மேனன் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு லட்சுமி மேனனும், அந்த மாப்பிள்ளை யார் நான் பார்க்கனும் என்று பதிலடி கொடுத்தார்.
அதன்பின் விஷாலும் ஒரு பெண்ணை பற்றி இப்படி தேவையில்லாத செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறி, லட்சுமி மேனன் விசயத்தில் முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது லட்சுமி மேனன் அளித்த பேட்டியொன்றில், விக்ரம் பிரவுடன் புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்த அனுபவம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அப்படத்தில் கடுமையாக சண்டையும் போட்டதால், நான் சண்டை காட்சியில் நடிக்கும் போது என் பாய் ஃபிரெண்ட்டை நினைத்துக்கொண்டு தான் எல்லோரையும் அடித்து துவைத்தேன் என்றும் அப்படி தான் அந்த காட்சியில் நடித்ததாகவும் கூறியுள்ளார் லட்சுமி மேனன்.
இதிலிருந்து தன் காதலருடன் பிரேக்கப் ஆகி அவர் மீது கடும்கோபத்தில் இருப்பதால் தான் இப்படி படத்தின் காட்சியில் நடித்திருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.