பிரபல காமெடி நடிகருக்கு மனைவியாக நடிகை லட்சுமி மேனன்!! வைரலாகும் புகைப்படம்..
மலையாள சினிமாவில் 15 வயதிலேயே அறிமுகமாகி தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை லட்சுமி மேனன்.
இப்படத்தினை தொடர்ந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து காதல் கிசுகிசுவில் சிக்கினார்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த தமிழ், மலையாள மொழிகளில் நடித்து வந்த லட்சுமி மேனன், ரெக்க படத்திற்கு பின் ஆள் அடையாளமே தெரியாமல் போனார்.
படிப்பை தொடர ஆரம்பித்து பின் புலிகுத்தி பாண்டியன் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தில் திவ்யாவாக நடித்து அனைவரையும் ஈர்த்தார்.
மலை, சப்தம் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது நடிகை லட்சுமி மேனன் நடிகர் யோகி பாபு நடிக்கும் மலை படத்தில் நடித்து வருகிறார். அதிலும் அவருக்கு மனைவியாகவும் நடித்துள்ளாராம் லட்சுமி மேனன். மலை படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

