ரோபோ ஷங்கர் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய மனைவி பிரியங்கா!! எஸ் வி சேகர் வெளியிட்ட வீடியோ..
ரோபோ ஷங்கர்
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ ஷங்கர் சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு தளத்தில் மயக்கம் அடைந்திருக்கிறார். உடனே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலன் இன்றி செப்டம்பர் 18 உயிரிழந்தார். அவரின் இறுதி முகத்தை காண சிவகார்த்திகேயன் முதல் தனுஷ் வரை பல நடிகர்கள் வந்தனர்.
மேலும் இறுதி சடங்கு நடந்து முடிந்து ரோபோ ஷங்கரின் உடல் மயானத்திற்கு கொண்டுச்செல்லும் போது, ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா நடனமாடி கணவரை வழி அனுப்பி வைத்தார். அவர் நடனமாடியதை பலரும் விமர்சித்து பேசி வருகிறார்கள்.
எஸ் வி சேகர்
இதுகுறித்து மூத்த கலைஞரும் அரசியல்வாதியுமான எஸ் வி சேகர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். ரோபோ ஷங்கர் மனைவி நடனமாடியதை யாரும் விமர்சிக்க வேண்டும், அவர்கள் குடும்ப விஷயம் என்று கூறியிருக்கிறார். இதொ அந்த வீடியோ...
ROBO SHANKAR மனைவி செலுத்திய இறுதி அஞ்சலி. pic.twitter.com/WvlT5ZFYTu
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) September 21, 2025