திருமாங்கல்யம் சீரியல் அப்டேட்: மகாவுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி... மெட்டியைத் தேடி அலையும் வருண்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘திருமாங்கல்யம்’ தொடர், அடுத்தடுத்து நடக்கும் சுவாரசியமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
லேப்டாப்பில் ஓடிய வீடியோ... அதிர்ச்சியில் திரு!
வீட்டுக்கு வந்த பிறகு, வரவேற்பறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென திருவின் லேப்டாப்பில் ஒரு வீடியோ ஓட ஆரம்பிக்கிறது. அதில் திருவும் மகாவும் அறையில் ஒன்றாக இருந்த காட்சிகள் வர, அதைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். உடனே அந்த வீடியோவை ஆஃப் செய்யச் சொல்லும் அவர்கள், அந்த வீடியோ எப்படி லேப்டாப்பில் வந்தது என்று தெரியாமல் குழம்பிப் போகிறார்கள். இதனால் அங்கே பரபரப்பு ஏற்படுகிறது.

பெங்களூருக்குக் கிளம்பும் திரு... ஏர்போர்ட்டுக்குச் செல்லத் தயாராகும் திவ்யா!
மறுபக்கம், திவ்யாவுக்கு போன் செய்து, அவளை ஏர்போர்ட்டில் விடுவதற்காகத் திரு கிளம்பத் தயாராகிறார். இதற்கிடையில், பயணத்துக்கான துணிகளைப் பேக் செய்யும் வேலைகளும் பரபரப்பாக நடக்கின்றன.
அதே நேரத்தில், வீட்டில் வருண் தனது தாத்தா, பாட்டியைக் கலாய்த்துக்கொண்டு ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கிறான். அப்போது அங்கே வரும் திரு, தனக்கு வெளிநாட்டு நபர்களுடன் மீட்டிங் மற்றும் கான்பரன்ஸ் இருப்பதால் பெங்களூருக்குக் கிளம்புவதாகச் சொல்லிவிட்டுப் புறப்படுகிறான்.
தொலைந்துபோன மெட்டி... குப்பையைக் கூட விடாமல் தேடும் வருண்!
திரு கிளம்பிய பிறகுதான், மகா தனது காலில் அணிந்திருந்த மெட்டி தொலைந்துபோனதை உணர்கிறாள். பதற்றமடைந்த அவள், வீட்டில் எல்லா இடங்களிலும் தேடிப் பார்க்கிறாள். அவளுடைய தவிப்பைப் பார்த்த வருண், என்னாச்சு என்று கேட்கிறான். மெட்டி தொலைந்த விஷயத்தை மகா சொல்ல, “நீ கவலைப்படாதே, நான் எப்படியாவது அதைக் கண்டுபிடிச்சுத் தரேன்” என்று நம்பிக்கை கொடுத்துவிட்டுக் கிளம்புகிறான்.
நேராக நிகழ்ச்சி நடந்த ரிசார்ட்டுக்குச் செல்லும் வருண், அங்கிருக்கும் செக்யூரிட்டியிடம் நடந்த விஷயத்தைச் சொல்கிறான். பிறகு மகா எங்கெல்லாம் சென்றாளோ, அந்த இடங்கள் முழுவதும் தேடிப் பார்க்கிறான். அதுமட்டுமில்லாமல், ரிசார்ட்டில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளைக்கூட விடாமல் அலசித் தேடுகிறான்.
“இங்கெல்லாம் கிடைக்காது” என்று மற்றவர்கள் சொன்னாலும், வருண் மட்டும் நம்பிக்கையை விடாமல் தேடிக்கொண்டே இருக்கிறான். கடைசியில், ஒரு வழியாகத் தொலைந்துபோன மெட்டியைக் கண்டுபிடித்து விடுகிறான்! தனக்கு உதவி செய்த குப்பை சேகரிக்கும் நபருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்புகிறான்.
மகாவுக்குக் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
இங்கே வீட்டில், மெட்டியைத் தொலைத்துவிட்டோமே என்ற வருத்தத்தில் மகா மாடியில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறாள். அழுது முடித்துவிட்டு சோகத்துடன் தனது அறைக்குள் செல்லும் அவளுக்கு அங்கே ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது.

அவள் தொலைத்த மெட்டி அறையில் பத்திரமாக வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் மகா ஆச்சரியத்தில் உறைந்து போகிறாள். தொலைந்துபோன மெட்டி எப்படி மீண்டும் அறைக்கு வந்தது என்று தெரியாமல் திகைக்கிறாள்.
மகா தொலைத்த மெட்டியை தேடி வருண் அலைந்தது அவளுக்குத் தெரிய வருமா? அவளுக்காக வருண் செய்த இந்த உதவியை மகா புரிந்துகொள்வாளா? என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.