அப்பா உயிரோடு இருக்க இதை செய்.. லதா ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவுக்கு போட்ட கண்டிஷன்

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth Divorce Latha Rajinikanth
By Bhavya Oct 13, 2024 03:30 AM GMT
Bhavya

Bhavya

Report

தனுஷ் - ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கடந்த 2004 - ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த கொண்டிருந்த இந்த ஜோடி திடீரென கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை சமூக வலைத்தளங்களின் மூலம் அறிவித்தனர்.

அப்பா உயிரோடு இருக்க இதை செய்.. லதா ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவுக்கு போட்ட கண்டிஷன் | Latha Condition On Aishwarya Divorce

தற்போது, தனுஷ் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார்.

லதா போட்ட கண்டிஷன்

அதில், "ரஜினிகாந்த் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை பரிசோதித்த மருத்துவர் லதாவிடமும் குடும்பத்தினருடமும் ரஜினிகாந்திற்கு மன அமைதியும், சந்தோஷமும் தேவை என கூறியுள்ளார்.

அப்பா உயிரோடு இருக்க இதை செய்.. லதா ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவுக்கு போட்ட கண்டிஷன் | Latha Condition On Aishwarya Divorce

ரஜினிகாந்த் இந்த நிலைக்கு வர காரணம் என்னவென்று அறிந்த லதா, மூத்த மகள் ஐஸ்வர்யாவை அழைத்து உங்கள் அப்பா நீண்ட நாட்கள் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் நீ தனுஷுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

அம்மா சொன்னதை கேட்டு ஐஸ்வர்யாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அதுமட்டுமில்லாமல், ரஜினி ஹாஸ்பிட்டலில் இருந்தபோதுகூட அவரை நேரில் சென்று சந்தித்த தனுஷ் கலங்கியபடி ரஜினியிடம் மன்னிப்பு கேட்டார்" என்று கூறியுள்ளார்.