விஜய் டிவி செய்வது நியாயமா! பாண்டியன் ஸ்டோர்ஸ் புது முல்லையின் போட்டோ வைரல்
Star Vijay
By Parthiban.A
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வந்த காவ்யா அறிவுமணி திடீரென அந்த தொடரில் இருந்து வெளியேறினார். அதற்கான காரணம் என்ன என்பதை அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது புது முல்லை வரும் பகுதிகள் இன்று முதல் ஒளிபரப்பை தொடங்க இருக்கிறது.
புது முல்லை
சிப்பிக்குள் முத்து தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த லாவண்யா தான் இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடிக்கிறார். முல்லை கெட்டப்பில் லாவண்யா இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
முல்லை ரோலுக்கு தற்போது மூன்றாவது நடிகை வந்திருக்கிறார். இப்படி நடிகைகளை மாற்றிக்கொண்டே இருப்பது நியாயமா விஜய் டிவி என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
விஜய் டிவி சீரியல் நடிகர் அர்ணவ் கைது! ஷூட்டிங் ஸ்பாட்டில் புகுந்து போலீசார் அதிரடி