25 ஆயிரம் கோடியில் மாளிகை!! அம்பானிக்கே டஃப் கொடுக்கும் அந்த இந்தியர் யார் தெரியுமா?
25 ஆயிரம் கோடியில் மாளிகை
இந்தியாவின் பிரம்மாண்டத்துக்கே பேர் போன முகேஷ் அம்பானியின் குடும்பம் சமீபகாலமாக பல விஷயங்களை நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்கள். அதிலும் முகேஷ் அம்பானி குடும்பம் வசிக்கும் அண்டிலியா வீடு கிட்டத்தட்ட 15 ஆயிரம் கோடி மதிப்பில் கட்டப்பட்டு உலகின் மிகவும் ஆடம்பர மாளிகை என்ற பேர் பெற்றது.
ஆனால் அந்த வீட்டைவிட பல படங்கு ஆடம்பரமான மாளிகையை இந்தியாவிலேயே ஒரு அர குடும்பத்தினர் வைத்துள்ளார்களாம். அது யாரும் இல்லை நவீன இந்தியாவின் மகாரானி என்று அழைக்கப்படும் ராதிகா ராஜே கெய்க்வாட் தானாம். பரோடாவின் மகாராஜா சமர்ஜித்சிங் கெய்க்வாட்டின் மனைவிதான் ராதிகா ராஜே கெய்க்வாட்.
இந்தியாவின் முக்கிய தம்பதிகளான இவர்கள், லட்சுமி விலாஸ் அரண்மனை ஒன்றில் வசித்து வருகிறார்கள். அதன் மதிப்பு 25,000 கோடி ரூபாயாம்.
ராதிகா ராஜே கெய்க்வாட்
உலகின் மிகப்பெரிய தனியார் இல்லமாக விலங்கும் இதன் மதிப்பு 1890ல் கட்டப்படதால் அப்போதைய காலக்கட்டத்தில் 25 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
லண்டன் பிரிட்டிஷ் அரச குடும்ப ஆடம்ரபர இல்லமான பக்கிங்ஹம் அரண்மனை மற்றும் முகேஷ் அம்பானியின் 15000 மதிப்புள்ள அண்டிலியா வீட்டையும் மிஞ்சியதாம் லட்சுமி விலாஸ் அரண்மனை.