கோடியில் புரள ஆசை!! நயன்தாரா நேஞ்சிற்கு சம்பளத்தை தூக்கி கேட்கும் தேசிய விருது நடிகை..
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் தன் திறமையால் டாப் இடத்தினை பிடித்துள்ளவர் நடிகை நயன் தாரா. தற்போது ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டிலும் காலெடி எடுத்து வைத்துவிட்டார்.
ஜவான் படத்தில் அவரின் லுக் பார்ப்பவர்களை மிரட்டிவிட்ட நிலையில் அப்படத்தில் சுமார் 10 கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன் தாரா திகழ்ந்தும் இதனால் அவரது மார்க்கெட்டையும் ஏற்றியிருக்கிறார்.
அவருக்கு போடியாக இருந்து வரும் நடிகை சமந்தாவும் உடல் நிலை பிரச்சனையால் மட்டுமே சில படங்களில் நடிப்பதில் யோசித்து வருகிறார். ஆனால் அவர் சிடடெல் படத்திற்காக 5 கோடிக்கு மேல் சம்பளமாக கேட்டிருக்கிறார்.
இப்படியொரு நிலையில் நயன் தாராவுக்கு போட்டியாக தற்போது நடிகை கீர்த்தி சுரேஷும் அதிக சம்பளத்தை ஏற்றியிருக்கிறார். தற்போது கிளாமர் ரூட்டுக்கும் மாறியிருப்பதால் கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.
ஒரு படத்திற்கு 3 கோடி வரை சம்பளமாக பெறும் கீர்த்தி தற்போது 3 மடங்கு அதிகரித்து 6 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறதுஆனால் அவர் சரியான வெற்றிப்படத்தை கொடுக்காமல் இருந்து வருவது தான் பெரிய கேள்விக்குறியாக தயாரிப்பாளர்களுக்கு இருந்து வருகிறது.