ஆல் ஏரியா கிங்குன்னு சொன்னதெல்லாம் பொய்யா!! லியோ படத்தால் வெறுச்சோடிய கோவை தியேட்டர்..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் கூட்டணியில் வெளியான படம் லியோ. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் பல எதிர்ப்புகளை தாண்டி கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது லியோ படம்.
வெளியாகிய முதல் காட்சிகளில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இருந்தபோதிலும் சுமார் 300 கோடி வசூலை 4 நாட்களில் பெற்றதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் சில திரையரங்குகளில் விடுமுறை நாளில் கூட வெறுச்சோடியுள்ளதாம் சில காட்சிகள்.
அதாவது கோவை பாபா திரையரங்கில் போதிய கூட்டமே இல்லாத காரணத்தால் லியோ காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாம்.
வெறும் 2 சதவீதம் மட்டுமே டிக்கெட் விற்பனையானதால் காத்து வாங்கிய லியோ காட்சியை கேன்சல் செய்திருக்கிறார்கள் திரையரங்கத்தினர். இதனால் லியோவை நெட்டிசன்கள் கேலி செய்து வருகிறார்கள்.
#BIG_BREAKING: கோவை பாபா திரையரங்கில் போதிய கூட்டம் இல்லாத காரணத்தால் லியோ காலை காட்சிகள் ரத்து. வெறும் 2% சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே பதிவு.#Leo #LeoDisaster
— TN Theatres (@TNTheatres_) October 23, 2023