50 வயது நடிகருடன் ரொமான்ஸ்!! லியோ விஜய் தங்கச்சி எலிசா தாஸ் எடுத்த முடிவு..

Prabhu Deva Madonna Sebastian Leo
By Edward Dec 14, 2023 05:30 PM GMT
Report

2015ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்துள்ளார்.

50 வயது நடிகருடன் ரொமான்ஸ்!! லியோ விஜய் தங்கச்சி எலிசா தாஸ் எடுத்த முடிவு.. | Leo Sister Madonna Commit 50 Yrs Old Actor Romance

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மடோனா, இப்படத்தில் நடித்துள்ளதை 2 ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் அடக்கவுடக்கமாக இருந்த மடோனா தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். அதன் பயனாக நடிகர் பிரபு தேவா நடிக்கும் சக்தி சிதம்பரம் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார்.

பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் இப்படத்தினை டிரான்ஸ் இந்தியா மீடியா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.