மகள் வயது இருக்கும் பெண்ணுடன் காதலா? 48 வயதான பிரபல நடிகரை விளாசும் நெட்டிசன்கள்
இன்றளவும் பிரபல படங்களின் வரிசையில் டாப் இடத்தில் இருக்கும் படம் டைட்டானிக். இப்படம் 1997-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்து உலகமெங்கும் பிரபலமானார்.
வருகின்ற காதலர் தினம் அன்று 'டைட்டானிக்' திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

காதலா?
வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் லியோனார்டோ டிகேப்ரியோ, இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.
இவர் வாழ்க்கையில் காதல் வருவதும் போவதுமாய் இருக்கிறது. இந்நிலையில் 48 வயதான டிகாப்ரியோ, 18 வயது இருக்கும் மாடல் அழிகியை காதலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியவுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு நெட்டிசன்கள் மகள் வயதில் இருக்கும் பெண்ணை எப்படி உங்களால் காதலிக்க முடியும்? என்று கமன்ட் செய்து வருகின்றனர்
