200 கோடிக்கு அப்படியே அப்பு வைத்த விஜய் தேவரகொண்டா.. 60 கோடிக்கு நாமம் போட்ட தயாரிப்பாளர்..
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் குத்துச்சண்டை சாம்பியன் மைக் சைசனை வைத்தும் இயக்கி இருந்தார்.
3 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் தற்போது கிட்டத்தட்ட 2500 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. நடிகை அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த இப்படம் தற்போது வெளியாகி படுமோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.
தமிழில் ஆர் கே சுரேஷ் பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியிட்ட இப்படம் வெளியாகிய முதம் பாதி நாளிலேயே படுமோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா இப்படம் ஓடிடி தளத்தில் 200 கோடிக்கு கேட்டார்கள்.
அதெல்லாம் முடியாது தியேட்டரில் தான் வெளியாகும் என்று பந்தா காட்டி கருத்து வெளியிட்டார்.
ஆனால் தற்போது தயாரிப்பாளருக்கு சுமார் 60 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே பாலிவுட் படங்கள் கேவலமான விமர்சனத்தை பெற்றதை அடுத்து லைகர் படமும் பாய் காட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது.