பிரதீப் ரங்கநாதனின் LiK திரைப்படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகி கடந்த 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் Love Insurance Kompany. இப்படத்தை நயன்தாரா மற்றும் லலித் குமார் இணைந்து தயாரித்திருந்தனர்.
அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து சீமான், மாளவிகா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சற்று வித்தியாசமான காதல் கதைக்களத்தில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த LiK, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால், வசூலிலும் இப்படம் சற்று பின்னடைவை சந்தித்தது.
இந்த நிலையில், LiK திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் மொத்தமாக ரூ. 67 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது.