செஞ்சது பண மோசடி... அபராதம் கட்டி சிறை தண்டனையில் இருந்து தப்பித்த இயக்குனர்..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் லிங்கு சாமி. அஞ்சான், சண்டகோழி படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கிரித்தி செட்டியை வைத்து தி வாரியர் படத்தினை வெளியிட்டார். படம் வெளியாக கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டிராப் செய்யப்பட்ட படத்திற்காக வாங்கிய 1.03 கோடி பணத்தினை திரும்ப கொடுக்கவில்லை என்று 6 மாத சிறை தண்டனை விதித்தது சைதாப்பேட்டை நீதிமன்றம்.
எண்ணி ஏழு நாள் என்ற படத்திற்காக வாங்கிய பணத்திற்காக காசோலையாக கொடுத்திருந்தார் லிங்குசாமி. ஆனால் வங்கி கணக்கில் பணமில்லாமல் செக்கை கொடுத்ததாக கூறி பிவிபி கேப்பிடல்ஸ் நிறுவனம் 2014ல் வழக்கு தொடுத்தது.
இதனால் லிங்குசாமி மீது 6 மாத சிறை தண்டனை விதித்தது. தற்போது 6 மாத சிறை அல்லது 10 ஆயிரம் அபராதம் என்று இருந்த நிலையில், 10 ஆயிரம் அபராதம் செலுத்தி சிறை தண்டனையில் இருந்து தப்பித்துள்ளார். இந்த விவகாரம் குறித்தும் அந்த தொகையை சீக்கிரம் கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளதாம்.