கொல்கத்தா வந்த லியோனல் மெஸ்ஸி!! மைதானத்தை கலவர பூமியாக்கிய கால்பந்து ரசிகர்கள்?
லியோனல் மெஸ்ஸி
கால்பந்து ஜாம்பவானான அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். முதலில் கொல்கத்தாவில் அவரது சிலையை அவரே திறந்து வைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து சால்ட் லேக் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன் மெஸ்ஸி தோன்றுவார் என்றும் கூறப்பட்டு அதற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனால் கொல்கத்தா மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆனால் மெஸ்ஸியை பார்க்க ஆர்வமுடன் இருந்த ரசிகர்கள் மைதானத்தில் அவரை சரியாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் வாட்டர் பாட்டில் உள்ளிட்டவற்றை மைதானத்திற்குள் வீசினர்.
கொல்கத்தா
இதன்பின் பாதுகாப்பு குறைபாடு, மோசமான ஏற்பாடுகள் காரணமாக 10 நிமிடங்களில் மெஸ்ஸி வெளியேறிய நிலை ஏற்பட்டது.
இதனால் ரசிகர்கள் கோபத்தில் கையில் இருப்பதை எல்லாம் மைதானத்திற்குள் எறிந்து பொருட்களை உடைத்தும், கட் அவுட்கள், பேனர்கள், போஸ்டர்கள் என கேலரி தடுப்புகளை தாண்டி நாற்காளிகளை நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவம் உலக கால்பந்து ரசிகர்களிடயே முகம் சுளிக்க வைத்துள்ளது.
அது ஒரு ரசிகர், இது ஒரு மோசமான நிகழ்ச்சி, மெஸ்ஸி வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தார். அவரையும் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மறைத்துக்கொண்டனர், அவரை பார்க்க முடியவில்லை, ஷாருக்கான் வருவார் என்று சொன்னார்கள் அவரும் வரவில்லை. இதனால் எங்கள் பணம், நேரம், உணர்வுகள் எல்லாம் வீணாகப்போய்விட்டது, எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று அதங்கமாக பேசியிருக்கிறார்.
#WATCH | Kolkata, West Bengal: Angry fans threw bottles and chairs from the stands at Kolkata's Salt Lake Stadium
— ANI (@ANI) December 13, 2025
Star footballer Lionel Messi has left the Salt Lake Stadium in Kolkata.
More details awaited. pic.twitter.com/mcxi6YROyr
