ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு அணியின் அதிகபட்ச ரன்கள் எவ்வளவு தெரியுமா? நம்பர் 1-ல் யார்?
Chennai Super Kings
Kolkata Knight Riders
Mumbai Indians
Sunrisers Hyderabad
IPL 2026
By Edward
அணியின் அதிகபட்ச ரன்கள்
ஐபிஎல் 2026 சீசன் 19 இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. முதல் போட்டியில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில் ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகிறார்கள். ஒவ்வொரு ஐபிஎல் அணிகள் அடித்த அதிகபட்ச ரன்கள் என்னென்ன தெரியுமா? இந்த லிஸ்ட்டில் எந்த அணி டாப் 1 இடத்தில் இருக்கிறார் என்பதை இப்பதிவில் பாருங்கள்..

- அதிக ரன்கள் அடித்த ஐபிஎல் அணிகளின் பட்டியலில் 10வது இடத்தில் குஜராத் அணி 233 ரன்களை 2023ல் மும்பை அணிக்கு எதிராக எடுத்தது.
- 9வது இடத்தில் ராஜஸ்தான் அணி, 242 ரன்களை ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆடி எடுத்துள்ளது. 235 ரன்களை 2021ல் ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணி எடுத்து 8வது இடத்தில் இருக்கிறது.
- அதிக ரன்கள் எடுத்த ஐபிஎல் அணிகளின் பட்டியலில் 246 ரன்களை 2010ல் ராஜஸ்தான் அணிக்கு எதிராக அடித்து 7வது இடத்தில் இருக்கிறது சென்னை அணி.
- 6வது இடத்தில் 247 ரன்களுடன் லக்னோ அணி 2023ல் பஞ்சாப் அணிக்கு எதிராக ஸ்க்கோரை எடுத்துள்ளது.

- 5வது இடத்தில் டெல்லி அணி 257 ரன்களுடன் 2024ல் மும்பைக்கு எதிராக எடுத்துள்ளது.
- 262 ரன்களை கொல்கத்தா அணிக்கு எதிராக 2024ல் பஞ்சாப் அணி எடுத்து 4வது இடத்தில் இருக்கிறது.
- 2013ல் புனே அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 263 ரன்களை எடுத்து 3வது இடத்தில் இருக்கிறது.
- கொல்கத்தா அணி 2024ல் டெல்லி அணிக்கு எதிராக ஆடி 272 ரன்கள் குவித்து 2வது இடத்தில் இருக்கிறது.
- அதிக ரன்கள் அடித்த ஐபிஎல் அணிகளில் ஹைதராபாத் அணி தான் முதல் இடத்தில் இருக்கிறது. 2024ல் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது 287 ரன்கள் அடித்து கலக்கியது.