விஜய்க்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பை இழந்த அழகி பட நடிகர்!! அவமானப்படுத்தி துரத்திய பார்த்திபன்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு முன் பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய்க்கு இன்று அளவிற்கும் மறக்க முடியாத படமாக அமைந்தது கில்லி படம் தான்.
அப்படத்தில் முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. கில்லி படத்தில் விஜய்யின் தங்கை கதாபாத்திரம் அமைந்திருக்கும். ஆனால் தங்கை கதாபாத்திரத்தினை கில்லி பட இயக்குனர் முதலில் யோசிக்காமல் தம்பி கதாபாத்திரத்தை தான் வைத்திருந்தாராம்.
அப்படி அந்த ரோலுக்கு நடிக்கை அழகி படத்தில் குட்டி பார்த்திபனாக நடித்த நடிகர் சதீஷ் ஸ்டீபன் நடிக்கவிருந்ததாம். ஆனால் ஒரு குடும்பத்தில் அண்ணன் இருந்திருந்தால் எதிரிசையாக தங்கை தான் இருப்பது வழக்கம்.
அந்த காமினேஷன் நன்றாக இருக்கும் என்பதால் நடிகை ஜெனி விஜய்க்கு தங்கையாக நடித்தார். இதுகுறித்து நடிகர் சதீஷ் ஸ்டீபன் சமீபத்திய பேட்டியொன்றில் கூறிருந்தார். அழகி படத்திற்கு பின் எந்த வாய்ப்பும் வரவில்லை.
ஆனால் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் படத்தில் நடிக்க அவரிடம் கேட்டிருந்தாராம். நீ இன்னும் வளர்ச்சியடைந்தவன் போல் தோன்றவில்லை என்று காரணத்தை கூறி துரத்தி இருக்கிறார்.
உங்கள் கதைக்கு ஏற்ப நானில்லை என்று கூறுங்கள் ஏன் உடலை வைத்து காரணத்தை கூறுகிறீர்கள் என்று நேருக்கு நேராக கெட்டதாகவும் கூறியுள்ளார் நடிகர் சதீஷ் ஸ்டீபன்.