சூர்யாவை போல் விஜய்க்காக தனுஷை வலைத்துபோட்ட இயக்குனர்! அடுத்தமல்டிவெர்ஷன் ரெடி..
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி போன்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பல வருட உழைப்புக்கு பின் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தினையும் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்தினையும் இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார்.
விக்ரம் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் மார்வல்ஸ் படத்தின் மல்டிவெர்ஷனை போல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை வைத்து எடுத்துள்ளார். அடுத்த விக்ரம் 3 படத்தினையும் கண்டிப்பாக எடுப்பேன் என்று கூறியுள்ள லோகேஷ் அடுத்தகட்டமாக தளபதி 67 படத்திற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது விஜய்யின் தளபதி 67 படத்தில் தனுஷும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் கிளைமேக்ஸ் 3 நிமிட காட்சிக்காக நடிகர் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
சம்பளம் எதுவும் வாங்காமல் கமலுக்காக நடித்து கொடுத்த அந்த காட்சி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ரோலக்ஸ் கதாபாத்திரம் பல படங்களில் வைக்கப்பட்ட மல்டிவெர்ஷன் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சூர்யாவை போன்று தளபதி 67 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பது ரசிகர்கள் மத்தியில் பல எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.