மாஸ்டர் பட இயக்குநரா! வில்லன்னா ஓகே! அலறியடித்து ஓட்டம் பிடிக்கும் முன்னணி நடிகர்கள்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். கடந்த லாக்டவுனிற்கு பிறகு பொங்கள் அன்று ரசிகர்களுக்கு டிரீட்டாக அமைந்தது மாஸ்டர் படம். படம் வசூலில் சாதனை படைத்தாலும் கதை அளவில் திருப்தியாகவில்லை என்று விமர்சனம் வழியாக தெரிந்தது. அப்படி பெரிய பில்டப் விட்டு இயக்கி இருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவை விட வில்லன் வேடங்களில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்களாம். ஹீரோவை விட வில்லன் நடிகருக்கு அவர் எழுதும் திரைக்கதையும் வசனங்களும் சிறப்பாக இருப்பதாக கூறுகின்றனர். மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி இப்படி உச்சத்திற்குப் போவார் என அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
அந்த அளவுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடிகட்டி பறந்து வருகிறார். விஜய் சேதுபதி போல் ஆக வேண்டும் என பல நடிகர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் படங்களில் வில்லன் வேடம் கிடைக்குமா என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகியுள்ளது.