இயக்குனருக்கு அதுக்கான இடமே கொடுக்கல? லோகேஷுக்கு கண்டீஷன் போட்ட கமல்ஹாசன்...

anirudh vikram kamalhaasan lokeshkanagaraj
By Edward Apr 11, 2022 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராகவும் உல நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஆண்டவர் என்ற பெயரையும் பெற்றார். இவர் நடிப்பில் கடைசியாக விஸ்வரூபம் 2 படம் 2018ல் வெளியானது.

அதன்பின் சங்கரின் இந்தியன் 2 படத்தினை ஆரம்பித்து ஷூட்டிங்கினையும் ஆரம்பித்தார். இடையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கொரோனா காலகட்டம் என படத்தி ஷூட்டிங் தள்ளிக்கொண்டே சென்றது.

பின் மாஸ்டர் படத்தின் வெளியீட்டுக்கு முன்பே அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை அடுத்தபடத்தில் கமிட் செய்தார். விக்ரம் என பெயரிடப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து டீசர், டைட்டில் பிஜிஎம் என வீடியோவை வெளியிட்டு மிரள வைத்தார் லோகேஷ்.

வரும் ஜூன் 10 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கமல் பற்றிய அனுபங்களை பகிர்ந்து கொண்ட லோகேஷ், அஎனக்கு படத்திற்கு தேவையான அனைத்தினையும் என் கட்டுப்பாட்டில் விடுங்கள் என்று நான் முன்பே கூறியதை அப்படி சுதந்திரமாக விட்டுவிட்டார்.

ஒரு யோசனை கூட எனக்கு கூறவில்லை. நான் கூட யோசனை கேட்டும் இது உன் படம் நீ என்ன பண்ணனுமோ அதை பண்ணு என்று கூறிவிட்டார் என லோகேஷ் கூறியுள்ளார்.