சினிமாவை விட்டு விலகும் லோகேஷ் கனகராஜ்.. மொத்தம் இத்தனை படம் தான் எடுப்பேன்!
Lokesh Kanagaraj
By Parthiban.A
லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்திற்கு பிறகு தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது.
வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளுக்கு லியோ படத்தின் பாடல் வெளியாக இருக்கிறது. மேலும் அன்று ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என லோகேஷ் தெரிவித்து இருக்கிறார்.
10 படம் தான் எடுப்பேன்..
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் பேசும்போது லோகேஷ் கனகராஜ் தான் 10 படங்கள் மட்டும் தான் எடுப்பேன் என்றும் அதன் பின் quit செய்துவிடுவேன் என கூறி இருக்கிறார்.
இதை கேட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.