திரிஷாவை பெட்ல போட்டு..மன்சூர் அலி கானின் கொச்சையான பேச்சு..லோகேஷ் கனகராஜ் கொடுத்த பதிலை பாருங்க
தற்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருப்பது திரிஷா - மன்சூர் அலி கான் விவகாரம்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலி கான், திரிஷா உடன் நடிக்கிறோம் பெட்ரூம் சீன் இருக்கும் குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்ட மாதிரி திரிஷாவை கட்டிலில் தூக்கி போடலாம் என்று இருந்தேன் என கூறி இருந்தார்.
இது தொடர்பாக பேசிய திரிஷா, மன்சூர் அலி கான் பேசி இருப்பது மிகவும் ஆபாசமான, அவமரியாதையான, பெண்களுக்கு எதிரான, அருவருப்பான, மோசமான ஒரு பேச்சு. இவரை போன்ற ஒரு ஆளுடன் நான் நடிக்காதது எனக்கு நல்லது, என் வாழ்க்கையில் இனியும் இவரை போன்ற ஒருவருடன் நடிக்க மாட்டேன் என்று திரிஷா பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் திரிஷாவுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், நாங்கள் அனைவரும் ஒரே அணியில் பணியாற்றியதால், திரு. மன்சூர் அலி கான் கூறிய பெண் வெறுப்புக் கருத்துக்களைக் கேட்டு மனமுடைந்து கோபமடைந்தோம். இந்த நடத்தையை நான் முற்றிலும் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதோ அந்த பதிவு
You May Like This Video