தர்ஷன் மட்டும் தான் அப்படியே இருக்கான்.. மத்தவங்க மாறிட்டாங்க.. கவினை தாக்கி பேசிய லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகி ஆகியுள்ளார். இவர் நடிப்பில் உருவான முதல் திரைப்படம், Friendship சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளிவந்த டிரெண்ட் ஆனாது. இப்படத்தில் தான் தர்ஸனுடன் இணைந்து ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த நடிகை லாஸ்லியா, " நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த பலரும், நிகழ்ச்சியில் ஒரு மாதிரி இருந்தார்கள். வெளியில் வேறு மாதிரி மாறிவிட்டார்கள். ஆனால் தர்ஷன் வீட்டிற்கு உள்ளேயும், தற்போதும் ஒரே மாதிரி தான் இருக்கிறார் " என்று கூறியுள்ளார். இதனால், நடிகை லாஸ்லியா மறைமுகமாக கவினை தான், கூறியுள்ளார் என்று சலசலப்பு எழுந்துள்ளது.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்