பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி கனி திரு!! உருக்கமாக பேசி வீடியோ..

Viral Video Bigg boss 9 tamil Kani Thiru
By Edward Dec 30, 2025 11:00 AM GMT
Report

கனி திரு

பிக்பாஸ் சீசன் 9 தற்போது விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. 85 நாட்களை தாண்டி சென்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 9ல் கடந்த வாரம், அமித் மற்றும் கனிதிரு எவிக்ட்டாகி வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். சும்மா இருக்கும் சுபிக்‌ஷா, அரோரா எல்லாம் வீட்டில் இருக்கும் போது கனி, அமித் வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி கனி திரு!! உருக்கமாக பேசி வீடியோ.. | Bigg Boss Tamil 9 Evicted Kani Emotional Video

இந்நிலையில் கனி ஒரு வீடியோவை பகிர்ந்து கண்ணீர்விட்டுள்ளார். அந்த வீடியோவில் கனி, எனக்கு இதுவரை சப்போர்ட் செய்வர்களுகு நன்றி, சந்தேகமும், வருத்தமும் எனக்குள் இருந்துகிட்டே இருக்கிறது, உங்கள் எல்லாருக்கும் தெரியும், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பினாலும் ஒருநாள் முழுக்க தனிமைப்படுத்தி தான் வைத்திருப்பார்கள்.

அந்த 24 மணி நேரமும் எனக்குள் ஒரு சந்தேகம் வந்துக்கொண்டே இருந்தது. மக்கள் எதற்காக என்னை வெளியேற்றினார்கள், என்னை எதற்காக அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று நான் யோசித்துக்கொண்டே இருந்தேன்.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி கனி திரு!! உருக்கமாக பேசி வீடியோ.. | Bigg Boss Tamil 9 Evicted Kani Emotional Video

24 மணிநேரமும் நான் செத்துப்பிழைத்திருக்கிறேன். அதன்பின் தான் என்னுடைய கணவர், தங்க விஜயலட்சுமி எல்லாம் வந்து எனக்கு புரிய வைத்தார்கள். என்னை பழைய நிலைக்கு அவர்களால் தான் கொண்டுவர முடிந்தது. ஆனால் மக்கள் எதற்காக என்னை வெறுத்தார்கள் என்ற கேள்வி எழுந்துக் கொண்டு தான் இருக்கிறது.

நான் எல்லா இடத்திலும் அன்பைத்தான் காட்டினேன், ஆனால் எதற்காக என்மீது வெறுப்பு வந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் எனக்கு வந்த கமெண்ட்ஸ் மெசேஜ் எல்லாவற்றையும் நான் படித்தேன், மக்கள் என்மீது காட்டிய பாசத்தை நான் பார்த்து சந்தோஷப்படுகிறேன் என்று சொல்லி எமோஷனல் ஆகியுள்ளார் கனி திரு.