என்ன லாஸ் இதெல்லாம்! இப்படியா வளர்த்த! லோஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்காகும் ரசிகர்கள்..
ஈழத்துப்பெண்ணாக சென்னையில் நடிக்க வாய்ப்பிற்காக வந்தவர் லொஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கவினுடன் காதலில் இருந்து பின் தந்தை கண்டித்ததால் கவினை விட்டு விலகினார்.
நிகழ்ச்சிக்கு பிறகு கவினும் -லொஸ்லியாவும் தங்கள் வேலைகளின் கவனம் செலுத்தி வந்தார்கள். லொஸ்லியா சில படங்களில் கமிட்டாகி நடிக்க இருந்த போது தந்தை மரணம் அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. சில காலங்கள் லொஸ்லியா இலங்கை சென்றுவிட்டு மீண்டும் இந்தியா வந்தார்.
பிரண்ட்ஷிப் படத்தில் முதன்முதலாக அவர் நடித்து வெளியான படமாக அமைந்தது. இதையடுத்து பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக கூகுல் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தினை தொடர்ந்து போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் கொண்ட லொஸ்லியா தற்போது க்ளாமருக்கும் கொஞ்சம் தலையை காட்டி இருக்கிறார்.
அப்படி சமீபத்தில் ஜிம் ஒர்க்கவுட் புகைப்படத்தை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் என்ன லாஸ் இது உன்ன இப்படியா வளர்த்த என்று கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
