ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவுக்கு அரியவகை நோயா!! கோபத்தில் அபிஷேக் பச்சன் எடுத்த வழக்கு..
இந்திய சினிமாவின் முன்னணி நடிகயாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகளான ஆராத்யா, உடல் நிலை சரியில்லை என்றும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யூடியூப் சேனல்களில் அவதூறு செய்திகளை பரப்பி வந்துள்ளனர்.
இதனை கண்ட ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன், தவறான உள்நோக்கத்துடன் என் மகள் பற்றி யூடியூப் சேனல்கள் வதந்திகளை பரப்பி வருவதாக சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவிட்டுள்ளனர்.
தன் தாயின் உதவியுடன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்துள்ளார் ஆராத்யா. பச்சன் குடும்பத்தினர் இதுகுறித்து வாய்த்திறக்காத நிலையில் ஆராத்யாவின் அப்பா அபிஷேக் பச்சன் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.
ஆராத்யாவிற்கு எதிராக வரும் வதந்திகளை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது, எதை கூறுவதாக இருந்தாலும் நேரில் வந்து சொல்லுங்கள் என்றும் என் அமக்ள் விருதுவிழாவிற்கு அவரது அம்மாவுடன் சென்று வருகிறார். ஆராத்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.
அது படிக்கும் பள்ளியில் இருந்து எடுக்கப்பட்டது. அவரது சுதந்திரத்தில் யாரும் தலையிடாதீர்கள் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில், குறித்த யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உண்மைக்கு மாறான வீடியோக்களை யூடியூப்பில் இருந்து நீக்கவும் உத்திரவிட்டுள்ளனர்.
