வாய்ப்பில்லாமல் விளம்பரமே கதியாக இருக்கும் லாஸ்லியா!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..
Losliya Mariyanesan
By Edward
இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து ஸ்டார் விஜய்யில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் லாஸ்லியா.
நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளில் சிக்கிய லாஸ்லியா அவரது தந்தையின் மரணத்தால் மனமுடைந்து போனார்.
அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா, இரு படங்களில் நடித்து கேரியரில் கவனம் செலுத்தினார்.

அதன்பின் வாய்ப்பில்லாமல் இருக்கும் லாஸ்லியா உடல் எடையை குறைத்து கிளாமர் லுக்கிற்கு மாறினார். தற்போது விளம்பர படங்களில் அதிகமாக நடித்து வரும் லாஸ்லியா ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இதனை நெட்டிசன்கள் பார்த்து லாஸ்லியாவை கலாய்த்து வருகிறார்கள்.