LIK பட எப்படி இருக்கு!! ப்ளூ சட்டை மாறன் இப்படி சொல்லிட்டாரே..
LIK பட எப்படி இருக்கு
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்ட பல நடித்து நேற்றும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகியுள்ள படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.

கடந்த சில வருடங்களாக அவருக்கு சரியான படம் அமையவில்லை என்ற சூழல் இருக்க LIK படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
2024-ல் இந்த உலகம் எப்படி இருக்கும், அப்போது காதலை தீர்மானிக்கும் ஒரு ஆப் என்னவெல்லாம் ஹீரோவின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்ற கதையை நோக்கி நகர்கிறது படம். தற்போது சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறன்
அதில், கதையாக இது வித்தியாசமான முயற்சி, ஆனால் அந்த் கதையை படக்குழு முழுமையாக நம்பி எடுத்தது போல தெரியவில்லை. கதைக்கு சரியான முடிவை தேடி செல்லாதது பெரிய குறை.
கதையில் இருக்க வேண்டிய மையக்கரு, ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது என்ற கருத்தை விட்டுவிட்டு, அதை சாதாரண ஹீரோ - வில்லன் மாதிரியான கோணத்தில் எடுத்துவிட்டது தான் படத்தின் முக்கிய பிரச்சனை. திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவாக இருக்கிறது.

பல காட்சிகள் முன்கூட்டியே யூகிக்க முடியும் அளவிற்கு இருக்கிறது. காமெடி காட்சிகளும் பெரிதாக வேலை செய்யவில்லை. சில இடங்களில் படம் மிகவும் மேம்போக்காக செல்வதால் கதையோடு ஒட்டிப்பார்க்க முடியவில்லை.
ரவி வர்மன் ஒளிப்பதிவு, சிஜிஐ வேலைகளும் தான் படத்தை ஓரளவிற்கு காப்பாற்றுகிறது. பெரிய போட்டிப்படங்கள் இல்லாத நேரத்தில் படம் வெளியிடப்பட்டுள்ளதால், இதுவே படத்திற்கு ஒரு பாதுகாப்பான சூழல், மொத்தத்தில் படம் ஆடியன்ஸுடன் பெரியளவில் கனெக்ட் ஆகவில்லை என்று விமர்சித்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.