சம்பளத்தை உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்.. அடேங்கப்பா! இத்தனை கோடியா
Actors
Pradeep Ranganathan
By Kathick
லவ் டுடே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன்.
கோமாளி படத்தில் இயக்குநராக இவர் அறிமுகமாகி இருந்தாலும், நடிகராக தற்போது கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் தற்போது Dragon மற்றும் LIK ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோவாக மாறியுள்ள பிரதீப் ரங்கநாதன், ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கேட்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 18 கோடி சம்பளம் கேட்பதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார். முன்னணி நடிகர்களுக்கு இணையாக இவர் சம்பளம் கேட்பது, பெரும் அதிர்ச்சியை திரை வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.