அந்தமாதிரியான வீடியோ மூலம் காசு சம்பாதிக்கும் நடிகை லூப்னா!! குழப்பத்தில் போலிசார்..
தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான கேக்கிரான் மேய்க்கிறான் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை லூப்னா அமீர். சமீபத்தில் திருமண வரன் பார்க்கும் செயலியில் திருமணத்திற்காக பதிவு செய்திருக்கிறார் லூப்னா. அப்போது ஐடி ஊழியரான மசியுல்லான்கான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் பழகி வந்த நிலையில் மசியுல்லான் கான் ஏற்கனபே திருமணமானவர் என்பது கண்டுபிடித்து அவரைவிட்டு விலகி இருக்கிறார் லூப்னா. இதனை தொடர்ந்து இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை வைத்து மார்ஃபிங் செய்து மிரட்டுவதாக சென்னை திருவல்லிகேனி மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்து மசியுல்லான்கானை கைது செய்தனர்.
அதன்பின் ஜாமினில் வெளியவந்த மசியுல்லான் கான், தன்னோடு இருந்த ஆபாச புகைப்படங்களை வைத்து அடியாட்களுடன் வந்து மிரட்டுவதாக கூறி புகாரளித்துள்ளார். இருவரும் மாறிமாறி புகாரளித்திருந்த நிலையில், மசியுல்லா கான் மீது அளித்த புகாரை வாபஸ் செய்யக்கூறி தனது மனைவியுடன் சேர்ந்து மிரட்டுவதாக தெரிவித்து பெரவள்ளூர், வேலூர், வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் லூப்னா.
அதனைதொடர்ந்து கடந்த 2020ல் மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் அதன்பின் விவாகரத்துக்கு அப்ளே செய்ததால் திருமணத்திற்கான வரம் தேடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார் மசியுல்லாகான்.
அதன்மூலம் பழகிய லூப்னா சுமார் 3 லட்சம் வரையில் பணம் வாங்கியிருப்பதாக கூறும் அவர், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள செயலி மூலம் ஆபாச வீடியோக்கால் மூலம் லூப்னா காசு சம்பாதித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
அதை தெரிந்து அவருடன் பழகுவதை நிறுத்திவிட்டதால் என் மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் லூப்னா என்று தெரிவித்துள்ளார். இருவரும் மாறிமாறி புகாரளித்து வரும் நிலையில் யார் சொல்வது உண்மை என்று காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.