லைக்கா நிறுவனத்தின் வருமான சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணம்.. சிக்கலில் மாட்டிய ரஜினி, உதயநிதி!
Rajinikanth
Udhayanidhi Stalin
Lyca
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பிரமாண்ட படங்களை தயாரித்து வரும் நிறுவனம் தான் லைக்கா. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் பல நடிகர்கள் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியானது.
இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிரபலங்கள் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் லைக்கா நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சோதனையின் போது முக்கியமான ஆவணம் ஒன்று சிக்கியுள்ளதாம், அதில் லைக்கா ரஜினிகாந்திற்கு ரூபாய் 50 கோடி ஒரே இரவில் மொத்த பணத்தையும் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
தற்போது இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த வருமான சோதனையில் உதயநிதிக்கு நெருக்கமான இரண்டு நபர்கள் மாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.