ஜெயலலிதாவை ஷூட்டிங்கில் பார்த்ததும் வர்ணித்து தள்ளிய கவிஞர்!! குசும்புக்கார வாலி..
50, 60களில் மறைந்த நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான எம் ஜி ஆரின் பல படங்களின் பாடல்களுக்கு கவிஞர் கண்ணதாசன் தான் பணியாற்றி வந்தார். ஆனால் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட அவருக்கு பதில் கவிஞர் வாலியை அறிமுகம் செய்து தன் படத்தின் பணியாற்ற வைத்தார்.
அப்படி ஆரம்பித்து எம்ஜிஆரின் பல பாடல்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருந்தார் வாலி. ஒரு சமயத்தில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1966ல் வெளியான படம் மேஜர் சந்திரகாந்த். எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நாகேஷ், முத்துராமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியது.
இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் ஜெயலலிதா நடமாடும் ஒரு டூயட் காட்சியில் பாடல் அமைந்தது. அதற்கு வரிகளை எழுத வாலி அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் வாலிக்கு ஒரு ஐடியாவும் வரவில்லை என்பதால் பக்கத்தில் நடந்த ஷூட்டிங்கிற்கு சென்றிருக்கிறார்.
அப்போது ஜெயலலிதா நடனமாடிக்கொண்டிருந்தார். இதற்கு முன் அவரின் அம்மாவுடம் குட்டையாடையில் ஷூட்டிங்கிற்கு வந்திருப்பதை பார்திருக்கிறார்.
ஆனால் இப்போது பெரிய பெண்ணாக கதாநாயகியாக பார்த்தவுடனே, அவருக்கு வரிகள் பொறித்தட்டியதாம். அப்படித்தான் நேற்று நீ சின்ன பப்பா.. இன்று நீ அப்பப்பா.. ஆயிரம் கண் ஜாடையோ... என்று வாலி எழுதியிருக்கிறார்.