வி.ஜே. மா.கா.பா ஆனந்தின் மனைவியா இது? நடிகைக்கு ட்ஃப் கொடுக்கும் அழகில் வைரலாகும் புகைப்படம்

tamil actor cinima
By Kanagasooriyam Jan 18, 2021 03:10 PM GMT
Report

தொலைக்காட்சி பிரபலங்கள் தற்போது சினிமாவில் பிரபலங்களாக கலக்கி கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் சிலர் வெற்றியும் பெற்று வருகிறார்கள். ஆனால் சிலரோ அது சுத்தமாக கைக்கூடாமல் போகிறது. அந்தவகையில் வானொலி ஆர்ஜேவாக இருந்து பின் பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில் ஒரு சில படங்களில் நடித்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்தும் நடுவராகவும் இருந்து வருகிறார். மேலும், ஐந்து படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இதுவரை ஒரு சிறந்த ஹீரோவாக ரசிகர்கள் மா கா பா ஆனந்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் மீண்டும் அவ்வப்போது சினிமா எனவும் முழுநேரம் விஜய் டிவிதான் எனவும் முடிவு செய்து பணியாற்றி வருகிறார். மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மா.கா.பா.ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவி சுசானாவுடன் நீண்ட நாள் கழித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

மேலும் சினிமாவில் அதிர்ஷ்டம் சுலபத்தில் கதவைத் தட்டிவிடும் இருந்த போதிலும் மா.கா.பா வின் இந்த வெற்றிக்கு அவரின் மனைவியும் மிகப் பெரிய காரணம் என்று பலமுறை பேட்டிகளிலும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.  


Gallery